மணிவிழாக்காணும் மூத்தஊடகவியலாளர் குணராசாவிற்கு வீடுசென்று பாராட்டு

வி.ரி.சகாதேவராஜா

இலங்கையின் பத்திரிகைத்துறை வரலாற்றில் ஏரிக்கரைநிறுவன தினகரன் பத்திரிகையின் பிரதமஆசிரியராக இருந்த கிழக்கின் ஒரேயொரு மூத்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குணராசா மணிவிழாக்காண்கிறார்.


60வயதை அடைந்திருக்கின்ற திரு குணராசாவை அவர் சார்ந்த கல்முனைநெற் ஊடகக்குழுமத்தினர் வீடுசென்று பாராட்டிக் கௌரவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்நிகழ்வு பாண்டிருப்பிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றது.


கல்முனைநெற் இணைய ஸ்தாபகர் கு.கேதீஸ் தலைமையில் சென்ற குழுவினர் சார்பில் ஓய்வுநிலை அதிபர் காளிக்குட்டி சந்திரலிங்கம் வாழ்த்துமடல் வாசித்து பாராட்டினார்.


அதன்போது சமுகமளித்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மணிவிழாக்காணும் குணராசாவிற்கு பொன்னாடை போர்த்துக்கௌரவித்தார்.

அச்சமயம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ஆ.சிறிதரன் படையல் ஆசிரியர் பாசம்புவி பிரதமஆசிரியர் வேதசகா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இறுதியில் திரு.குணராசா அடக்கமாக ஏற்புரை நிகழ்த்தினார்.