சுவிஸ் தேர்தலில் நான்காவது தடவையும் வெற்றி பெற்ற ஈழத்தமிழர்.

சுவிஸ்ட்ஸர்லாந்து நாட்டின் ஒலிம்பிக் தலைநகர் என அழைக்கப்படும் லவுசான் மாநகரத்தில்  அண்மையில் நடைபெற்ற  மாநகரசபைத்தேர்தலில் யாழ்ப்பாணம் கதிரிப்பாய் எனும் கிராமத்தை சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் நான்காவது தடவையாகவும் வெற்றிபெற்றுள்ளார்.

சுவிஸ் நாட்டில் சமுகசேவைகள் தமிழ்தேசியஅரசியலில் தன்னை ஈடுபடுத்தியுள்ள  தம்பிப்பிள்ளை நமசிவாயம் என்பவரே வெற்றி பெற்றுள்ளார்.

2006 ஆண்டு முதல் லவுசான் மாநகரத்தில் தேர்தலில் முதல்முறையாக போட்டிபோட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் இம்முறையும் நடைபெற்ற தேர்தலில்  சோசலிசக்கட்சி  சார்பில் போட்டியிட்டு 8176வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சமுகசேவையில் மிகவும் ஈடுபாடுடைய இவர் இலங்கையிலும் பல்வேறு சமுகசேவைகளில் ஈடுபட்டுவருவதுடன் லவுசான் மாநிலத்தில் கற்பக விநாயகர் ஆலயத்தின் போசகராக இருந்து ஆலயம் அமைப்பதற்கு தேவையான நிதியினை பெறும் செயற்பாடுகளிலும் மும்மூரமாக செயற்பட்டு வருகின்றார்.