ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யாரோ ஒருவர் இருக்கையில் இது முஸ்லிம் சமுகத்தின்மீது வேண்டுமென்று திணிக்கப்பட்ட பழி என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு அ.இ.மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஸரப் முதுநபீன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
உலகம் முழுவதிலும் இஸ்லாம்போபியா என்ற போர்வையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுக்கொண்டுவருகிறார்
இத்தாக்குதலின் சூத்தரதாரி யார் என்பதை அரசாங்கம் இந்த உலகுக்குத் தெரியப்படுத்தவேண்டும். இந்த அறிக்கை மூலமாக பல அமைப்புகள் தடைசெய்யப்படவேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் பொதுபலசேனாவைத் தடைசெய்யவேண்டிய அவசியமில்லை என சிலர் குரல்கொடுக்கிறார்கள்.உண்மையில் இலங்கையில் பொதுபலசேனா உருவாகியபின்புதான் இனங்களிடையே பிளவுகள் தோற்றம்பெற்றன.குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய புரிதல் ஏனையஇனங்களிடையே பிழையாக தோற்றுவிக்கப்பட்டது.