மாவடிப்பள்ளி மின்விளக்கு பிரச்சினைக்கு மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டினால் தீர்வு கிட்டியது !

நூருல் ஹுதா உமர்

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் கடந்த பல மாதங்களாக அம்பாறை- மாவடிப்பள்ளி பிரதான வீதியில் ஒளிராமையால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த  பிரச்சினைக்கு காரைதீவு பிரதே சபை தவிசாளர் கி.ஜெயஸ்ரீரில் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் ஆகியோரின் முயற்சியினால் தீர்வு கிட்டியுள்ளது.

முதற்கட்டமாக பொருத்தப்பட்ட மின்விளக்குகளுக்குறிய மின்சாரம் கட்டணத்தை பிரதேச சபை பெறுப்பேடுத்திருந்த நிலையில் 2ம் கட்டத்திற்குறிய மின்விளக்குகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து பிரதேச சபை பெறுப்பேற்காமல் இருந்தமையினால் இந்த மின்விளக்குகள் சில மாதங்கள் ஒளிர்ந்த பின் மீண்டும் ஒளிர்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.

இந்த நிலைமையை சீர் செய்வதாயின் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேச சபையின் கட்டுப்பாட்டிற்குள் இந்த விடையத்தை மாற்ற வேண்டியிருந்த நிலையில் அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் கடந்த மாதம் இடம்பெற்ற சபை அமர்வில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

அதன் பிரகாரம் கடந்த செவ்வாய்க்கிழமை (9) பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினராகிய நானும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பெறியியலாளரை நேரடியாக சந்தித்து இந்த மின்விளக்குகள் விடையத்தை பிரதேச சபையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றி அவர்களின் முன்னிலையில் நிலுவையில் இருந்த மின்சாரம் கட்டணம் செலுத்தப்பட்டு உத்தியோக பூர்வமாக பிரதேச சபை தவிசாளரின் ஊடாக காரைதீவு பிரதேச சபை இதனை பொறுப்பேற்றுக் கொண்டது என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் தெரிவித்தார்.

விவசாயிகளின் வயல் அறுவடை முடிந்த பின்னர் யானைகளின் தொல்லைகள் அதிகமாக உள்ளதாலும், இந்த வீதியை 24 மணிநேரமும் மக்கள் பயன்படுத்துவதனாலும் உடனடியாக வெளிச்சமூட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அப்பிரதேசத்தின் குடிமகனாகனும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த மின்விளக்கு பொருத்தும் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளராக இருந்த பொறியியலாளர் என்.டீ.என். சிராஜுதீனின் முயற்சியினால் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது