நதி நடந்த பாதை பாராட்டும் கௌரவமும்

பைஷல் இஸ்மாயில் –

அட்டாளைச்சேனை மண்ணுக்கு கிண்ணியா மண்ணில் பாராட்டுடன் கௌரவமும் கடந்த சனிக்கிழமை கிண்ணியா அஷ்ஷ_றா மஜ்லிஸ் தலைவர் ஏ.ஆர்.எம்.பரீத் தலைமையில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நிருவாக சேவையில் கடந்த 30 வருட பூர்த்தி செய்த கிழக்கு மாகாண உள்@ராட்சி, கிராம அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சட்டமும் ஒழுங்கும், நிதி, போக்குவரத்து சுற்றுலாத்துறை, கட்டடங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த தேசமான்ய யூ.எல்.ஏ.அஸீஸிக்கு சேவை நலன் பாராட்டும் “நதி நடந்த பாதை” நூல் அறிமுகமும் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நிருவாக சேவை அதிகாரிகள், வைத்தியர்கள், உள்@ராட்சி மன்றங்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.