கறுப்பு ஞாயிறு இலங்கையின் பல்வேறு தேவாலயங்களில் போராட்டம்!வடக்கு, கிழக்கில் இல்லை! இரணைதீவை புதைகுழியாக்காதே என முல்லைத்தீவில் போராட்டம்

சண்முகம் தவசீலன்

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய கத்தோலிக்க தேவாலயங்களின் முன்பாக எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன.

ஞாயிறு திருப்பலியை தொடர்ந்து கத்தோலிக்கர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய நாளை கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தும் முடிவை கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, ஆரானைகளின் பின் போராட்டம் இடம்பெற்றது. எனினும், வடக்கு, கிழக்கில் இந்த போராட்டங்கள் இடம்பெறவில்லை.

மாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றன

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகர் செல்வபுரம் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு தேவாலயங்களிலும்  இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றன