அக்னிச் சிறகுகள் பேரவை ஒழுங்குபடுத்தலில் சானு பவுண்டேசனால் கற்றல் உபகரணங்கள்.

அக்னிச் சிறகுகள் பேரவை ஒழுங்குபடுத்தலில் சானு பவுண்டேசனால் மட்/நாவற்காடு திருவள்ளுவர் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வு பாடசாலையின் ஆசிரியர்களான தேவி,சியாமளா,மற்றும் நாவற்காடு கிராம சேவையாளர் திரு சுமணராஜ் ஆகியோரின் முயற்சியினால் சானு பவுண்டேசன் அனுசரணையில்  வணபிதா வசந்த செல்வம், சிவா,பிரதீபன்,வதனா,ரெபேக்கா ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் அக்னிச் சிறகுகள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ம.ஜெயக்கொடி,அக்னிச் சிறகுகள் பேரவை உறுப்பினர்கள்,நாவற்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சித்திரவேல் ஜயா,பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.