திருமலையில் ஈ கல்வி அறக்கட்டளையினால் மாணவர்களுக்கு விரலிகள்

ஈ கல்வி அறக்கட்டளையினால் ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விரலிகள் (pen drives)  வழங்கி வைக்கப்பட்டன.

விரலிகளை ஈ கல்வி அறக்கட்டளையின் திருக்கோணமலை மாவட்ட இணைப்பாளர் திரு.க.திருச்செல்வம் அவர்களால்  மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில்.
திருக்கோணமலை கிங்கோ லயன்ஸ் கழகமும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்கியதோடு அனைத்து மாணவர்களுக்கும் நம்மட முற்றம் மாத இதழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்…