நல்லடத்திற்காக காத்தான்குடியிலிருந்து ஓட்டமாவடிக்கு எடுத்துச்செல்லப்பட்ட சடலம்.

ரீ.எல்.ஜவ்பர்கான்–

கொவிட் 19 தொற்றினால் மரணமாd ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய முடியும் என்ற வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் முதலாவது ஜனாசா நல்லடக்கத்திற்காக அடக்கத்திற்கான  இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஓட்டமாவடி மஜ்பா புரத்திற்கு இன்று மாலை எடுத்துச்செல்லப்பட்டது.
மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணின் ஜனாசா கொவிட்  தொற்றினால் மரணமடைந்து ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஜனாசாத் தொழுகை நடாத்தப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இராணுவத்தினர் பொலிசார்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.