ஓட்டமாவடியில் இன்று 05 கொவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஒட்டமாவடி சுகாதாரப்பிரிவில் கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மஜ்மா நகரில் கொவிட்- தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு  சிபார்சு வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இடங்களை  நேரடியாக சென்று பார்வைியிட்டு சிபார்சினை வழங்கியுள்ளார்.

இதேவேளை இன்று (05.03.2021) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் நல்லடக்கம் தெய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இன்று பிற்பகல் 5 சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன.

ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரு சடலங்களும் காத்தான்குடியில் உள்ள மூன்று சடலங்களும் இன்று நான்கு மணியளவில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.