சாய்ந்தமருதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம். நவாஸுக்கு வரவேற்பும்,

அரபுக்கல்லூரி புனர்நிர்மாண ஆலோசனை கூட்டமும்.

நூருல் ஹுதா உமர்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், அக்கரைப்பற்று மஹ்லருத்துள் காதிரிய்யா ஹல்லாஜ் மக்காம் தலைவருமான எம்.ஏ.எம். நவாஸ் அவர்களை  சாய்ந்தமருது சாவியத்துள் ஹல்லாயிய்யா வாஹிதிய்யா சற்குரு மக்காம் பள்ளிவாசலுக்கு வரவேற்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று மற்றும் சாய்ந்தமருது நூருல் இர்பான் அரபுக்கல்லூரி புனர்நிர்மாணம் சம்பந்தமான ஆலோசனை கூட்டமும் நேற்று மாலை  சாய்ந்தமருதில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று காதிரிய்யா ஜும்மா பள்ளிவாசலின் போஷகர் ஷேக் மக்கத்தார் ஏ மஜீத் கலீபத்துள் ஹல்லாஜ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது சாவியத்துள் ஹல்லாயிய்யா வாஹிதிய்யா சற்குரு மக்காம் பள்ளிவாசலின் தலைவர் எம்.எம்.எம். ஜப்பார், பள்ளிவாசலின் செயலாளரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம இலிகிதருமான ஏ.சி.எம். நிஸார், பொருளாளர் எம்.எம். பஸ்மீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்ஸூர், தாருஷபா அமைய தவிசாளர் மௌலவி ஸபா முகம்மத் நஜாஹி, நூரானிய்யா ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி முஹம்மட் அஸ்பான், நூருல் இர்பான் அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி எம். நிப்ராஸ் ஸக்கபி, பிரதியதிபர் மௌலவி நிஷாத் சர்கி உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.