முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம்

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று மாலை 2 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும் கு.திலீபன் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மாந்தை கிழக்கு பிரதேச சபை தலைவர் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந.றஞ்சனா மற்றும் திணைக்கள தலைவர்கள் அரச அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
குறித்த கலந்துரையாடலில் கல்வி சுகாதாரம் விவசாயம் கால்நடை வளர்ப்பு வீதி உள்ளிட்ட துறைசார் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது
அத்தோடு வடகாடு பகுதியில் காடழிப்பு செய்து தனிநபரால் அபகரிக்கப்பட்ட காணி விடயம் தொடர்பிலும் வீதி திருத்த பணிகளில் ஒரு திணைக்களத்தின் வீதியை மற்ற திணைக்களம் திருத்த முடியாது என்ற நிலையில் திணைக்களங்களின் நிலைப்பாடு காரணமாக தமது வீதிகளின் திருத்தம் தடைப்படுவதாகவும் இதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன