கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு

(எம்.எல்.சரிப்டீன்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல்துறை சார் கலைஞர்களுக்கு ‘கலைஞர் சுவதம்’விருது’வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கவிஞர் முழுமதி எம்.முர்தளா அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீபினால் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்படுவதையும் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நசீல், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்சான் உள்ளிட்ட அதிதிகள் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.