அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் மரநடுகை

வி.சுகிர்தகுமார்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் மரநடுகை திட்டத்திற்கமைய அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தினால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில்  மரம் நடுகை நிகழ்வு இன்று இடம் பெற்றது.
இச் செயற்திட்டத்தின் தலைவரும் உதவி மாவட்ட ஆணையாளருமான எப்.எப்.றிபாஸ்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிலையப் பொறுப்பதிகாரி விஜயதுங்க,பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத், மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளரும்,முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளருமான யூ.எல்.எம்.ஹாசீம்,சம்மாந்துறை பிரதேச செயலாளரும்,சங்கத்தின் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனிபா,ஆலோசகர் எம்.என்.நபீல் ,மாவட்ட ஆணையாளர்,எஸ்.ரவீந்திரன்,உதவி ஆணையாளர்களான எஸ்.எல்.முனாஸ்,எம்.எச்.ஹம்மாத், ஜெயினூதீன்,ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.
இதன்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய மைதானத்தை சுற்றி மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன்; அரசாங்கத்தின் மரநடுகை கொள்கை திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு வலியுறுத்தப்பட்டது.