16 அணிகள் பங்கு பற்றிய MARU CAPITAL CHAMPIONS TROPHY 2021

(யு.எல்.அலி ஜமாயில்  ,கல்முனை

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் முதலாவது குழு நிலைப்போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது அதில் BLASTERS அணி பல சவால்களுக்கு மத்தியில் அறைஇறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு போதிய வெளிச்சமின்மை காரணமாக அதன் தொடர்ச்சி இன்று இடம்பெற்று இரண்டாம் குழு நிலை போட்டியில் வெற்றி பெற்ற MARU CAPITAL அணியுடன் இறுதி போட்டியில் மோதியது . இப்போட்டியில் MARU CAPITAL அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய BLASTERS அணி 7 ஓவர் முடிவில் 41 ஓட்டங்களை பெற்றனர்.

இதற்கமைய 42 ஓட்டங்களை வெற்றி இலக்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய MARU CAPITAL அணி இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது இருப்பினும் MJM THAJUN அவர்களின் நுட்பமான பந்து வீச்சுப் பிரதியினால் 3 ஓட்டங்களினால் சாம்பியன் ஆனது BLASTERS அணி இதன் மூலம் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியிலேயே தொடர்ந்து மூன்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டது.

இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கழக உறுப்பினர்கள் மற்றும் வீரர்களுக்கு கழகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.