கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோருக்கு பிரியாவிடை நிகழ்வு

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய அல்ஹாஜ் எம்
எம் நஸீர் மற்றும் கணக்காளராக கடமையாற்றிய வை.ஹபிபுல்லாஹ் ஆகியோர் இடம்மாற்றம் பெற்று செல்லுகின்றார்கள்.அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கல்முனை பிரதேச செயலக நலம்னோம்பல் அமைப்பின் செயலாளர் எம்.எம் ஹசன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(01)நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை புதிய பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.என்பதோடு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கும்,கணக்காளராக கடமையாற்றிய வை.ஹபிபுல்லாஹ் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கும் இடம்மாற்றம் பெற்று செல்லுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்