கல்முனை பிரதேச செயலாளராக ஜே.லியாகத் அலி

ஏ.பி.எம்.அஸ்ஹர்
கல்முனை பிரதேச செயலாளராக மருதமுனையைச்சேர்ந்த சிரேஷ்ட நிருவாக அதிகாரி ஜே.லியாகத் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை  நேற்று திங்கட் கிழமை  பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த  இவர் நேற்று முதல் கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றவுள்ளர் என்பதோடு இவருக்கான நியமனம் அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது..
இலங்கை நிருவாக சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த இவர் இதற்கு முன்னர்  காரைதீவு,சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகவும்,ஓட்டமாவடி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும கடமையாற்றியுள்ளதுடன் கல்முனை மாநகர சபையில் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய இவரது பதவியேற்பு நிகழ்வில் இதுவரை கல்முனை பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராகக்கடமையாற்றிய.இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்,உதவி திட்டமிடல்பனிப்பாளர்  எம்.எம்.
ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம் கலீல்,கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதிருத்தீன்,பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.