முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கின்றனர்.

உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) அவரது விடுதியில் சந்திப்பதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துடன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயிஷா அபூபக்கர் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தினார்.
இச்சந்திப்பின்போது பலவந்த ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான்கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.