திருமலையில் விபத்து வைத்தியரும் மகளும் காயங்களுடன் வைத்தியசாலையில்

பொன்ஆனந்தம்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் கன்னியா கிளிக்குஞ்சு மலை வீதி வளைவில் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது

இவ் விபத்தானது  நேற்றுகாலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியரும் அவரது மகளும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை உப்புவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்