காத்தான்குடி முடக்கம் நகரசபைத்தலைவரால் சுகாதாரத்துறையினருக்கு எதிராக வழக்குத்தாக்கல்.

இலங்கை தண்டனைச்சட்டக்கோவையின் பிரிவு 184 பிரிவு 183இன்கீழான முறையே வேண்டுமென்று பகிரங்க அலுவலரின் கடமையைப்புரிவதற்கு இடையூறு புரிந்தமை இசட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டவாறான உதவியை பகிரங்க அலுவலருக்கு புரிவதிலிருந்து தடுத்தமை போன்ற தண்டிக்கத்தக்க குற்றங்களை புரிந்துள்ளார்கள் என காத்தான்குடி நகரசபைத்தலைவர் சுகாதாரத்துறையினருக்கு எதிராக மட்டக்களப்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு நாளை காலை 08.30மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

காத்தான்குடி நகரசபைப்பிரதேசத்தில் கொரனா முடக்கம் தொடர்பாக காத்தான்குடி நகரசபைத்தலைவர் சாகுல் ஹமிட் முகமட் அஸ்பர் கிழக்கு மாகாணசுகாதாரப்பணிப்பாளர் அழகையா லதாகரன்இ மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் ஆகிய இருவருக்கும் எதிராகவே இவ் வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ள நகரசபைத்தலைவர் பல்வேறுவிடயங்ளை மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

நான் காத்தான்குடி நகரசபைத்தவிசாளர் என்பதோடு தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச்சட்டத்தின்கீழ் சுகாதாரஅமைச்சர் அவர்களினால்25.03.2020 அன்று வெளியிடப்பட்ட2168ஃ6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மேற்குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முறையான அதிகாரியாகவும் இமேலும் 15.10.2020 அன்று வெளியிடப்பட்ட2197ஃ25-2020 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மேற்குறித்த சட்டத்தின்கீழ் குறிப்பிடப்படும் கொவிட்-19 தொடர்பான ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டவர் என குறிப்பிட்டுள்ளதுடன் மேலும் பல்வேறு காரணங்களையும் முன்வைத்துள்ளார்.