மட்டக்களப்பில் கணக்காளர் ஒருவருக்கும் கொவிட் தொற்று.

மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளர் உட்படமட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஏழு பேருக்குகொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு 03, செங்கலடி 03, ஆரையம்பதி 01 என குறிப்பிட்டபோன்ற சுகாதாரப்பிரிவுகளிலேயே இத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கணக்காளர் அவருடைய கணவர் உட்பட நாவற்குடாவில் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

நேற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 680ஆக அதிகரித்துக்காணப்படுவதுடன் தொற்றுக்குள்ளானவர்களில் 06பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.