முறைசார் முறைசாரா நிதி சேவைகள் நிதி நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

?????????

பாறுக் ஷிஹான்

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் வருமானம் சார்ந்த நிதிக் கல்வியறிவு மற்றும் முறைசார் முறைசாரா நிதி சேவைகள் நிதி நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நேற்று நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றதுடன் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச செயலக பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கி வைத்தார்.

இதன் போது கொவிட் 19 பாதிப்பு காரணமாக இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் வருமானம் சார்ந்த நிதி சார் கல்வி அறிவு மற்றும் முறைசார் முறைசாரா நிதிச்சேவைகள் நிதி நிறுவனங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும்  என்ற அடிப்படையில் கடமையின் நிமித்தம் பொதுமக்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி  பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன் உட்பட வெளிக்கள உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

?????????
?????????
?????????
?????????