பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு பயணிக்கலாம்.

கோவிட் -19  புதிய மாறுபாட்டின் காரணமாக பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு பயணிப்பதற்கான தற்காலிக தடையை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தடை உடனடியாக (17) நீக்கப்படும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிமுகப்படுத்திய சுற்றுலா வழிகாட்டுதலின் கீழ் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்படுவார்கள்..

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்பட்டு பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் வைரஸின் புதிய திரிபு விரைவாக பரவியதைத் தொடர்ந்து, டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து பிரிட்டனில் இருந்து நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் நிறுத்த அரசாங்கம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..