இங்கிலாந்து புதிய கொரனா வைரஸ் 94 நாடுகளுக்கு பரவியுள்ளது

இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா வைரஸ் (கென்ட் மாறுபாடு) இப்போது உலகெங்கிலும் 94 நாடுகளுக்கு பரவியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் காணப்படும் புதிய கொரோனா வைரஸ் 46 நாடுகளுக்கும், பிரேசிலில் காணப்படும் புதிய கொரோனா வைரஸ் 21 நாடுகளுக்கும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸ் விகாரங்கள் ஒவ்வொன்றும் எளிதாகவும் வேகமாகவும் பரவுகின்றன என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.