முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாய்ச் சுகாதார விழிப்புணர்வு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார மேம்பாடு தொடர்பான   விழிப்புணர்வு  நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் இன்று(17)  இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்   குணசிங்கம் சுகுணனின் ஆலோசனைக்கமைய வாய்ச்சுகாதார பிரிவினரால் இவ்விழிப்புணர்வு  பிராந்திய பல் வைத்திய நிபுணர் எம்.ஐ.எம்.ஹபீல் தலைமையில்   நடைபெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வினை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன் ஆரம்பித்து வைத்தார்.

மேலும்  தொடர்பான ஆலோசனைகளையும் |பற்சுகாதாரம் வாய்ச் சுகாதாரம் தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்களக்கு பற்சிகிச்சையாளர்களான  எல்.ஜெஸ்மின் எஸ். விதயாசினி உள்ளிட்ட பலர் தெளிவு படுத்தியதுடன்  ஆலோசனைகளை வழங்கி வைத்தனர்.

மேலும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆ.ரஜிப்கான்  உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.