பிள்ளையான் எம்.பி உட்பட அவரது அலுவலக ஊழியர்கள் ரி.எம்.வி.பி உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசி .

ரீ.எல்.ஜவ்பர்கான்-

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும்  ரி.எம்.வி.பி.கட்சி தலைவருமான  சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட  அவரது அலுவலக பணியாளர்களும்  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று கொவிட்-19  தடுப்பூசியினை      ஏற்றிக்கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  நாடளாவிய ரீதியில்  கொவிட்-19  தடுப்பூசி   ஏற்றும் நடவடிக்கைகள் அரச திணைக்கள  அதிகாரிகள்  சுகாதார துறையினர்  ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்   இராணுவத்தினருக்கு   முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்  நாடாளுமன்ற உறுப்பினர்களும்   தமது பாதுகாப்பினை மேற்கொள்ளும் வகையில்  தமக்கான கொவிட்-19  தடுப்பூசி  ஏற்றும் நடவடிக்கையில் ஈட்டுபட்டுள்ளனர்
.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  உட்பட அவரது பணியாளர்களுக்கு   தடுப்பூசி  ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது