அரிதான உயிரினங்களை இழக்கும்இலங்கை.

கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் உலகில் அதிக எண்ணிக்கையிலான ஆபத்தான அரிதான உயிரினங்களை இழந்துள்ளது தெரியவந்துள்ளது

ஆபத்தான அரிதான முப்பத்தைந்து உயிரினங்களில் இருபத்தொன்று இலங்கைக்குச் சொந்தமானது என்று ரெட் டேட்டா புத்தகத்தில் உள்ள அறிக்கைகளை மேற்கோளிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைச்சர் மஹிந்த அமரவீராவிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன..

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த வாரம் வியாழக்கிழமை சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள், சூழலியல் அறிஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஊடகவியலாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில்

நம் நாட்டில் சில தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்கள் சரியான கவனம் செலுத்தாததால் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.