இம்மாதம் கடைசி வாரத்திற்குள் இலங்கையில் கொரோனா இறப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு

இம்மாதம் கடைசி வாரத்திற்குள் இலங்கையில் கொரோனா இறப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அதன்  பேச்சாளர் டாக்டர் ஹரிதா அலுத்ஜே கருத்து தெரிவிக்கையில் ஜனவரி மாதத்தில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட  தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

“ஜனவரி முதல் பிப்ரவரி ஆரம்பம் வரை, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட 92 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இலங்கையில் புதிய விகாரத்துடன் நோயாளிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.