இலங்கையில் அமைச்சரவை அமைச்சர் பதவி இல்லாத ஒரே மாகாணம் கிழக்கு மாகாணம். இராஜங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க.

இலங்கையில் அமைச்சரவை அமைச்சர் பதவி இல்லாத ஒரே மாகாணம் கிழக்கு மாகாணம் என இராஜங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அமைச்சரவை அமைச்சு கிடைக்காதது குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை
மக்கள் முன்னணியை அமைப்பதில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான் தான் .வெற்றி மலையின் உச்சியில் கட்சி சென்றபோது ஓரங்கட்டப்பட்டதில் நான்வருத்தப்படுகிறேன்.
கட்சியில் ஒரு கிளையை அமைக்காத மற்றும் கட்சியில் எந்த உறுப்பினர்களையும் நியமிக்காதவர்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிக மூத்த ஆளும் கட்சி உறுப்பினர் தானே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்