நாட்டில் 50 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றிய பின் எனக்கு தடுப்பூசி ஏற்ற தயார்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

கொவிட் 19 தடுப்பூசியை நான் இப்போது ஏற்ற தயாரில்லை அதேவேளை  நாட்டில் 50 வீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தான் எனக்கு தடுப்பூசியை ஏற்றுவேன் என மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார் .
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தி கட்சி ஊடாக தேர்தலில் தொலைபேசி சின்னத்திலே முன்னின்று போட்டியிட்ட நாங்கள் மகிந்த ராஜபக்ஷவின் கட்சிக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக இது ஒரு இனவாத ரீதியான மதவாத ரீதியாக இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசாங்கம் என தெளிவாகவும் கூறி மக்களிடம் வாக்கு கேட்டோம்.
அவ்வாறே வடக்கு கிழக்கில் இருக்க கூடிய தலைவர்கள் மற்றும் தென்கிழக்கில் இருக்க கூடிய தலைவர்கள் இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உருவாகிய அரசாங்கம் என அதற்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தோம்.
அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். கிழக்கு மாகாணத்தில் மக்கள் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்தனர்
ஆனால் 20 திருத்தச் சட்டம் கொண்டு வந்தபோது கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசில் இருந்த சில முஸ்லீம் உறுப்பினர்கள் அதேபோல அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்  உட்பட சில உறுப்பினர்கள் அரசாங்கத்துக்;கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள்.
இப்போது வாக்களித்த உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள்; தாங்கள் இந்த ஜனாஸா விடயத்திற்காக வாக்களித்ததாக தற்போது தெரிவித்துவருகின்றனர். இதனை  உண்மையில் ஏற்றுக் கொள்ளமுடியாது
இந்த ஜனாஸா விடயம் சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களுடைய உரிமையாக இருக்கின்ற விடயம் உலக சுகாதார அமைப்பும் கூட தெளிவாக கூறியிருக்கின்றனர்.
ஆனால் இந்த அரசாங்கம் இனவாத ரீதியாக எடுத்த வாக்குகளை பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்துவதற்கு எடுத்த முடிவுதான் அது எனவே அந்த முடிவை மாற்றுவதற்கு எடுத்ததுதான் 20 திருத்தச்சட்டத்திற்கு வாக்களித்தோம் என வாக்களித்த முஸ்லீம் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும்  20 திருத்தச் சட்டம் என்பது வேறு ஒன்று ஜனாஸா பிரச்சரச்னை வேறு ஒன்று எனவே இரண்டும் ஒன்றல்ல  20 திருத்தச் சட்டமூலம் இந்த நாட்டிலே சர்வாதிகார ரீதியில் ஒரு ஜனாதிபதியை உருவாக்குவதற்கு ஜனநாயக முறையை இல்லாமல் ஆக்க கூடிய நீதிமன்றத்தின் சுயாதீனத்தை, சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்யக் கூடியது ஒன்றுதான் 20 வது திருத்தச்சட்டம்
20 வது திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்தது என்பது இந்த நாட்டிலே ஜனநாயகத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு, சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரத்துக்கு எதிராக வாக்களித்தது  வரலாறு ரீதியாக நாட்டுமக்களுக்கு செய்த துரோகம்.
நாங்கள் மக்கள் மத்தியிலே வாக்குகேட்டது இந்த நாட்டில் ஜனநாயத்தை உருவாக்க அதனை இல்லாமல் செய்வதற்கு இவர்கள் வாக்களித்துவிட்டு இப்போது ஜனாஸா விடயத்தை முன்வைத்து வாக்களித்தாக தெரிவிக்கின்றனர் மக்களை மீண்டும் ஏமாற்றும் நாடகம் .
இவர்கள் தெளிவா பட்டப்பகலில் செய்த தவறை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்டாலும் மன்னிப்பு கொடுக்க முடியாத விடயம் ஏன் என்றால் அவர்கள் அளித்த வாக்கினால் அந்த திருத்தச்சட்டம் அமுல்படுத்ப்பட்டிருக்கின்றது.
எனவே மன்னிப்பு கேட்கின்ற விடயங்கள் இருக்கின்றது கேட்டமுடியாத விடயங்கள் இருக்கின்றது. அரசாங்கம் செய்த துரோகம் அந்த அநீதிக்கு எதிராக நாங்கள் போராட்டங்கள் நடாத்த வேண்டும் அதனை சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும்  செய்து கொண்டிருக்கின்றோம்.
எனவே அதனை முன்வைத்து அவ்வாறு அநீதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடியாது அதனை வண்மையாக கண்டிக்கின்றோம். அதேவேளை  அவர்கள் சொல்லும் காரணத்தை மக்கள்கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அவர்களின் கட்சி தலைவர்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். என்ன நடவடிக்கை எடுக்கப்போவதாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் தடுப்பூசி 5 இலச்சம் அதில் ஒருவருக்கு இரண்டு தடுப்பூசி ஏற்றவேண்டும் அப்படி பார்த்தால்  இரண்டரை இலச்சம்  பேருக்குத்தான் ஏற்றமுடியம் எனவே மக்களுடன் பணியாற்றுகின்ற அரசாங்கத்தில் இருக்க கூடிய சேவை செய்கின்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்
அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினர்கள் போல மக்களுடன் நெருற்கி பணியாற்றுகின்ற உள்ளூராட்சி உறுப்பினர்கள் இலச்சக்கணக்கில் இருக்கின்றனர். எனவே அவர்களுளை விடுத்து பாராளுமன்ற உறப்பினர்களக்கு ஏற்றுவதை என்னால் அங்கீகரிக்க முடியாது.
எனவே இப்போது நான் தடுப்பூசியை ஏற்றப்போவதில்லை மக்கள் மத்தில் வேலை செயகின்றவர்கள் மற்றும் நாட்டிலே நூற்றுக்கு 50 வீதமானவர்களக்கு தடுப்பூசி  ஏற்றப்பட்ட பின்னர் தான் நான் ஏற்ற தயாராக இருக்கின்றேன் என்றார்.