இலவச கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு.

பீ.எம்.றியாத்

ஏறாவூர் நகர் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைய ஏறாவூர் உதவும் உள்ளங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் தலைமையில் 18 பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.

அந்த வகையில் மட்/மம/றூகம் சுபைர் ஹாஜியார் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதி அதிபர் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்சாத் அலி, மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் SM.அஜ்வத் ஆகியோரது பங்குபற்றலுடன் மிகச் சிறப்பாக நேற்று (16) செவ்வாய்க்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.