30 வருடகால வரலாற்றில் முதல் தடவையாக சாதனை படைத்த மாணவன்.

கர்பலா அல்மனார் வித்தியாலயத்தின் 30 வருடகால வரலாற்றில் முதல் தடவையாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 161 புள்ளிகளைப் பெற்று சாதணை படைத்த மாணவன் இன்று கௌரவிக்கப்பட்டார்.

காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள கர்பலா அல்மனார் வித்தியாலயத்தில் சாதணையாளர் பாராட்டு விழா இன்று(15.02.2021) திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.
இதில் காத்தான்குடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் உட்பட ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இப் பாடசாலையின் 30 வருடகால வரலாற்;றில் முதல் தடவையாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 161 புள்ளிகளைப் பெற்ற  ஆர்.பர்ஹாத் ஜாசி எனும் மாணவனை பாராட்டு கௌரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் எழுபது புள்ளிகளுக்கு மேல் பெற்ற நான்கு மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் இவ்வாண்டு முதலாம் தரத்துக்கு சேர்ந்த மாணவர்களும் வரவேற்கப்பட்டனர்.