கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலும் கொவிட் தொற்று.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர் ஒருவர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் கண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அதிகாரியை நேற்று (13) அடையாளம் கண்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த அதிகாரி இலங்கை அரசு வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையில் இருந்தபோது தனக்கு வெளி தரப்பினருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனது முதல்-நிலை தொடர்பாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது..

அலுவலக வளாகத்தை கிருமி நீக்கம் செய்வதன் மூலம்  தொற்றைகட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.