விமல் வீரவன்ச வீட்டில் ஒன்றுகூடிய கட்சித்தலைவர்கள்.

அமைச்சர் விமல் வீரவன்சாவின் இல்லத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அரசியல் கட்சிகளின் வருகையுடன் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

அமைச்சர் வீரவன்சவின் இல்லத்திற்கு வெளியே ஊடகங்களுடன் பேசிய அமைச்சர் உதய கம்மன்பில, ஏப்ரல் 2015 முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அப்போதைய எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள்  ஒன்றுகூடினோம்..

கூட்டங்கள்  பலகாலமாக நடைபெறவில்லை நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 கட்சிகள் கூடிவருகின்றோம்.

நாங்கள் அரசாங்கத்தை விட்டு பிரிந்து செல்லமாட்டோம்  அமைச்சர் விமல் வீரவன்சா தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பெரும் முயற்சி செய்துள்ளார், மேலும் அவரது சேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது நன்றியற்றது

அமைச்சர் வாசுதேவா நானாயக்கராவும் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில்,  நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டோம் , அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க  கூடிவிரும்புவருகின்றோம்..

சிலர்உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அரசாங்கத்துடன் பிளவுகளை உருவாக்க முயற்சிப்பதாக அமைச்சர் நானாயக்கரா எச்சரித்தார்.