பல்லவர்கால எட்டுமுக  தாராலிங்கம்? இல்லை ஸ்தூபக் கல் தென்னிலங்கை ஊடகங்கள்.

முல்லைடிவிலுள்ள குருடுமலை அல்லது குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புராதன ஸ்தூபியின் ஒரு பகுதியையும், அனுராதபுர காலத்தின் முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு ஸ்தூபக் கல்லையும் கண்டுபிடித்துள்ளனர் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கபோக் கல்லால் ஆன ஸ்தூபியின் உயரம், முற்றத்தில் இருந்து சுமார் 6.70 மீட்டர்  அடியில் உள்ளது, இப்போது அது சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிககப்படுகின்றது.

இதேவேளை

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் மக்களது பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த 18.1.2021 அன்று தொல்பொருள் ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களுடைய தலைமையில் அகழ்வாராட்சி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது
அதனை தொடர்ந்து சுமார் ஒரு வார காலப்பகுதியில்  குறித்த பகுதிக்கு வருகை தந்த அகழ்வாராட்சியாளர்கள் இராணுவத்தினரையும் இணைத்து அகழ்வாராட்சி பணிகளை மேற்கொள்கின்றவர்கள் தொடர்ச்சியாக அகழ்வாராட்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
குறித்த குருந்தூர் மலை பகுதியிலே இலிங்க வழிபாடுகள் பெற்றமைக்கான பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக குறித்த பகுதியில் பல மூத்தவர்கள் கருத்து தெரிவித்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் முகமாக குருந்தூர்மலைப்பகுதியில் இடம்பெறும் அகழ்வாராட்சி பணிகளின் போது  பல்லவர்கால எட்டுமுக  தாராலிங்கம் என கருதப்படும் லிங்க உருவத்தை ஒத்த சிலை ஒன்று வெளி தோன்றியுள்ளது
குறித்த குருந்தூர் மலை பகுதியில் இடம்பெறும் அகழ்வாராட்சி பணிகளை பார்வையிட்டு அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்த போதும் குறித்த புகைப்படங்கள் முகநூலில் வெளியாகி வருகின்றன