கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதி உச்ச நிலையை அடைந்துள்ளது.

 

நாட்டில் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதி உச்ச நிலையை அடைந்துள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனால் புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவியுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்

செய்யப்படும் PCR பரிசோதனைகளில் 7.2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாக அவர் கூறினார். இது பாரிய அதிகரிப்பு எனவும் நிலைமை மோசடைய வாய்ப்பு உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

சில பகுதிகளில் கொரோனா பரவல் 15%, 20%, 25%, 30% நிலைமைகளுக்கும் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் அம்பன்பொல திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய வகை கொரோனாவிற்கு தற்போது வழங்கப்படும் தடுப்பூசி ஈடு கொடுக்காது எனவும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் அதனை நிறுத்தி விட்டதாகவும் வைத்தியர் அலுத்கே கூறினார்