காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் சகல பாடசாலைகளும் 45 நாட்களின் பின்னர் இன்று திறப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்-

தனிமைப்படுத்தல் காரணமாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த காத்தான்குடி கல்வி கோட்டத்தின் சகல பாடசாலைகளும் இன்று புதிய தவணைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.அனைத்து பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைககள் இன்று(10) ஆரம்பமாகின.

புதிய ஆண்டில் புதியதவணைக்காக
முதன்முறையாக இன்று கற்றல்  கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பிரதேசத்திலுள்ள 25 பாடசாலைகளும திறக்கப்பட்டன.சகல வகுப்பு  மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளித்தனர்.

சுகாதாரப் பிரிவினர் வழங்கிய சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக சகல மாணவர்களும் சுகாதார நடைமுறைகளைப் பேணி முகக்கவசமணிந்து கைகளைக் கழுவி சமுக இடைவெளிகளைப் பேணி சமுகமளித்திருந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காத்தான்குடி பிரதேசத்தில் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.