வெல்லாவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த நிலகீழ் சோதனைச்சாவடியை பொலிசார் இடித்து மூடியுள்ளனர் 

(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள கலைமகள் லித்தியாலய வளாகத்தில் கடந்த யுத்தகாலத்தில் விசேட அதிரடிப்படையினரால் அமைக்கப்பட்டிருந்த நிலகீழ் சோதனைச்சாவடியை நேற்று செவ்வாய்க்கிழமை (10) உடைத்து அழித்து மூடியுள்ளதாக வெள்ளாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நிலக்கீழ் சோதனைச்சாவடி கடந்த யுத்தகாலத்தில் விசேட அதிரடிப்படையினர் அமைத்து அதில் கடமையாற்றி வந்தனர் பின்னர் நாட்டில் ஏற்பட் சமாதான சூழலில் அதில் இருந்து படையினர் வெளியேறி இருந்தனர்
தற்போது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அந்த நிலக்கீழ் சோதனைச்சாவடியில் மாணவர்கள் சென்று விளையாட முற்பட்டனர் இதனால் அதில் ஏதாவது வெடி பொருட்கள் இருந்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படவாய்பு இருப்பதையடுத்து அந்த நிலக்கீழ் சோதனைச்சாவடியை மூட முடிவு எடுக்கப்பட்டது
இதனடிப்படையில் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்று  விசேட அதிரடிப்படையினரும் பொலஸாரும் இணைந்து இந்த சோதனைச்சாவடியை பக்கோ இயந்திரத்தின் இடித்து மூடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.