இனம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு-பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் ஆற்றிலிருந்து எழுபது வயது(70) மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்றினை பொதுமக்களின் உதவியுடன் பொலிசார் கடந்த 31ம் திகதி மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூம்புகார் ஆற்றில் இருந்து மரணமடைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை கண்ட பிரதேச வாசிகள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு சம்பவம் பற்றி தெரியப்படுத்தப்பட்டதனையடுத்துமட்டக்ளப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி திடீர் மரண விநாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை-ஜீவரெத்தினம் அவர்கள் சடலத்தை பார்வையிட்ட பின்னர் மரணமானவரின் உறவினர்கள் முன்வந்து பிரதேத்தை இனம் காட்டும் வரை பதின்நான்கு நாட்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதே அறையில் பிரேதத்தை வைத்து அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளளார்.

மரணமானவரின் உறவினர்கள் உரிமை கோரினால் மட்டக்களப்பு பொலிஸாரை தொடர்பு கொள்ளும் படியும் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ம்டடக்ளப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.