மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற அரசாங்கங்கள் தோல்விகளையே அடைந்துள்ளன.

நீதியமைச்சர்

இலங்கையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற ஒவ்வொரு அரசாங்கமும் மோசமாக தோல்வியடைந்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த யதார்த்தத்தை உணர்ந்து அதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

வீர வசனங்களால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது தற்கால உலக நிலைமைக்கு முகங்கொடுத்து ராஜதந்திர சிக்கல்கள் வராமல் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நிதியமைச்சர்

போட்டித் தன்மைவாய்ந்த உலகில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை எதிர்கொள்ள முடியும்  கிழக்கு முனையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.