எப்.முபாரக்
பொத்துவில் – பொலிகண்டி போராடத்தில் கலந்துகொண்டிருந்த வாகனங்களை புல்மோட்டை பாலத்தில் வைத்து ஆணி மூலம் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டம் தற்போது திருகோணமலை நகரிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இப்பேரணியில் கலந்துகொண்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தும் நோக்குடன் புல்மோட்டை பாலத்தின் மீது ஆணிகளை வைத்து சிலர் மோசமான செயற்பாட்டில் ஈடுப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பேரணியில் கலந்துகொண்டிருந்த மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இதன்காரணமாக பேரணி சற்று தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மீது திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள இளைஞர்களினால் பரவலான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறதாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர் .