தீபம் ஏற்றி போராட்டக்காரர்களை வரவேற்றமூதூர் கிளிவெட்டி குமாரபுரம் மக்கள்.

பொன்ஆனந்தம்
சுதந்திரதினத்தில்இரண்டாவது நாள் பேரணியை மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் மக்கள் தீபம் ஏற்றி வரவேற்றனர்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை – குமாரபுரம் என்ற கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைபெரும் துன்பியல் நிகழ்வாகும்.

இதன் மூலம் 9 பெண்கள், 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர்.

குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துசாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது
இந்நிலையில் இம்மக்கள் இந்த போராட்டத்தை உணர்வு பூர்வமாக வரவேற்றனர்

வீதிக்கருகில் இறந்தவர்களை அஞ்சலிக்கும் முகமாக தீபங்களளும் ஏற்றி வழிபாடும் செய்யப்பட்டன.