ஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், நிழாமியா இளைஞர் கழகத்தினதும் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு

பீ.எம்.றியாத்

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏறாவூர் நகர் இளைஞர் கழக சம்மேளனம், நிழாமியா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டிலான சுதந்திர தின நிகழ்வும், மர நடுகையும், சிரமதானமும் ஏறாவூர் மிச்நகர் ஆர்.டி.எஸ் வீதியில் அமைந்துள்ள நிழாமியா மத்ரசா முன்றலில் 04.02.2021 வியாழக்கிழமை காலை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏ.டப்ளியூ.இர்சாத் அலி அவர்களின் வழிநடாத்தலில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜெ.எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.

தேசிய கொடியினை ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்கள் ஏற்றி வைத்தார்.
இதன்போது ஏறாவூர் நகர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர், மாவட்ட உதவி பதிவாளர், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர், கிராம சேவை அதிகாரிகள் , சமூக சேவை உத்தியோகத்தர் , மத்ரஸா அதிபர், மௌலவிமார்கள், நிருவாக சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது 2020 ஆண்டு இடம்பெற்ற பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.