இலங்கையும் லிச்சென்ஸ்டைனின் (Liechtenstein) அதிபரும் இராஜதந்திர உறவுகளைத் தொடங்க முடிவு

இலங்கையும் லிச்சென்ஸ்டைனின் (Liechtenstein) அதிபரும் இராஜதந்திர உறவுகளைத் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த ஆய்வறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.

Liechtenstein  மேற்குஐரோப்பாவில், சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய மன்னராட்சி நாடாகும். குறிப்பிட்ட நாட்டில் சுவிஸ்பிராங் பணப்புழக்கமே காணப்படுகின்றது.

ஆகவே, 1961 ஏப்ரல் 18 ஆம் தேதி இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின் அடிப்படையில் இராஜதந்திர உறவுகளைத் தொடங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..