இந்த ஆண்டு சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 4ம்திகதி 73 வது தேசிய சுதந்திர தினம். இது கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறும்.
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக தமிழில் தேசிய கீதம் பாடுவது 2015 ல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் நடைமுநைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.