பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 23ம் திகதி இலங்கை வருகின்றார்.

2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் பரவியதன்பின் இலங்கைக்கு வருகை தரும்  பிராந்திய நாட்டுத்தலைவராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 23 ஆம் தேதி இலங்கைக்கு வருகின்றார் என  வெளியுறவு செயலாளர் அட்மிரல் டாக்டர் ஜெயந்தா கொலம்பேஜ் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்காக ‘ அவர் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் செய்யவுள்ளார்.  விஜயத்தின்போதுஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள்குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.