கிழக்கில் சில உள்ளூராட்சி சபைகளின் நிதி அதிகாரம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களிடம்

கிழக்கு மாகாணத்தில்  ஏறாவூர்நகரசபை, மண்முனைபிரதேசசபை, கோறளைப்பற்றுவடக்குபிரதேசசபை அம்பாறை நகரசபை, இறக்காமம் பிரதேசசபை, பொத்துவில் பிரதேசசபை, பதியத்தலாவ பிரதேசசபை சேருவில, தம்பலகாமம் பிரதேசசபைகள் என்பன 2021ம் ஆண்டுக்குரிய வரவுசெலவுத்திட்டத்தினை நிறைவேற்ற தவறியுள்ளமையினால் குறிப்பிட்ட சபைகளின்  தவிசாளர் பதவிகள் 2012ம் ஆண்டின்  21ம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைகளின் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 17ம் பிரிவுக்கு அமைய வெற்றிடமாகியுள்ளது.

இதனால் சம்பளங்களும் கொடுப்பனவுகளும், பயணப்படிகள், காதிதாதிகள், நடைமுறைச்செலவுகள், LDSP போன்றவற்றை நடைமுறைப்படுத்த மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளருக்கு அங்கிகாரம் வழங்குவதாக விசேட வர்த்தமானி ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இவ்அங்கிகாரம் குறிப்பிட்ட சபைகளுக்குதவிசாளர் நியமனம் இடம்பெறுவரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது