பழுகாமத்தில் இரத்த தானம் முகாம்

திருப்பழுகாமம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாகவும் இரத்ததான நிகழ்வு, பழுகாமம் வைத்தியசாலையில்  நேற்றுநடைபெற்றது.
“விலை மதிப்பிட முடியாத அறப்பணியில் நீங்களும் பெருமையுடன் பங்காளராகுங்கள்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் டாக்டர் திருமதி கீர்த்திகா மதனழகன் தலைமையிலான தாதிய உத்தியோகத்தர்கள், குருதிப் பரிசோதகர்கள், வைத்தியசாலை சிற்றுழியர்கள் என பலரும் கலந்து கொண்டு குருதிக் கொடைகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குருதிக்கொடையாளராக கலந்துகொண்டார்.
போரதீவுபற்று இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் பொதுமக்கள் மத்தியில் குருதித்தான விழிப்புணர்வையும், கொரோனாவிற்கு பின்னர் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள குருதிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலுமே இவ்வாறான இரத்ததான நிகழ்வினை  செய்துள்ளோம் என, ஏற்பாட்டுக் குழுவினர் இதன்போது தெரிவித்தனர்.