காத்தான்குடியில் முடக்கப்பட்ட பகுதிகள் விடுவிப்பு.

ரீ.எல்.ஜவ்பர்கான்-

கடந்த ஒரு மாதகாலமாய் அமுலில் இருக்கும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலலுள்ள 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 30ம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்கு வந்தது.கடந்த 22ம் திகதி 8 கிராம சேவகர் பிரிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.

தொடர்ந்து 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் அமுலில் இருந்த நிலையில் 167, 167E ,167 C ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தவிர ஏனைய 7 பிரிவுகளிலும் இன்று முதல் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டதால் இன்று வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்படிருந்தன.வாகன போக்குவரத்துகளும் இடம்பெற்றன.

விடுவிக்கப்பட்ட  பகுதிகளிலும் பொதுச் சந்தைகள் பாடசாலைகள் மத்ரசாக்கள் பள்ளிவாயல்கள் பாலர் பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்குமெனவும் சுகாதார தரப்பு அறிவித்துள்ளது.