கிண்ணியா பிரதேசத்தில் கொவிட் தடுப்பு மருந்துகள்.

ஹஸ்பர் ஏ ஹலீம்_

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள்   பிரிவுகளுக்குட்பட்ட   சுகாதார பகுதிகளில் தொழிலில்  ஈடுபடுவோருக்கு நேற்றும்  இன்றும் கொவிட் 19 தடுப்பூசி கிண்ணியா தள வைத்திய சாலையில் வைத்து ஏற்றிக் கொண்டனர்.

வைத்திய அதிகாரிஎம்.எச்.எம்.றிஸ்வி, மற்றும் ஏ எம்.எம்.அஜீத், கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.ஜிப்ரி ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்திய அரச உயர் அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோருக்கு கொவிட் -19  தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் சுமார் 200  பேர்கள் சுகாதார பகுதிகளில் கடமை புரிவதாகவும் இதில்  கடமைகளில் ஈடுபட்ட  முதல் நாள் 40 பேர்களுக்கு  நேற்று இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது கட்டம்கட்டமாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது

 கொவிட் -19 ஒரு குப்பியில் 10 பேருக்கு தடுப்பூசி சொட்டு மருந்து அளவு உள்ளதாகவும் அதனால் ஒரு பத்து பெயர் சேர்ந்தவுடன் இவ் ஊசி ஏற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.